மாறுதல்
இருட்டு ஒரு
பகல் செய்தது
எல்லோருக்கும் முகங்கள்
இருந்தன அப்போது
இரசம் பூசிய கண்ணாடிகள்
கண்டுபிடிக்கப்படவில்லை
ஒருவரை ஒருவர் பார்த்து
முகங்களை
புரிந்து கொண்டார்கள்
வெளிச்சம்
ஒரு இரவு செய்தது
முகங்களை யாரும்
வைத்திருக்கவில்லை......
முகம் தேடும் கண்ணாடிகள்
உருவாகின
ஒளி....
அஞ்ஞாதவாசம் போயிற்று
கண்களுக்கு
முகங்கள் புலப்படவில்லை
காலம் இரவைக்
கரைத்துக் கொண்டிருந்தது
எஞ்சிய முகங்களுக்காக
இருட்டு
மீண்டுமொரு பகல்
தயாரித்துக் கொண்டிருக்கிறது
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment