Tuesday, August 14, 2012

தேடல்

தேடல்

by Anand Prasad on Sunday, August 12, 2012 at 11:03pm ·

இன்னும் கொஞ்ச நாள் தான்
இருந்து விட்டால் போதும்
மாற்றி விடலாம்!!!
வேர்களுக்கு சுவாசம்
வேண்டியிருக்கிறது
பிரம்மச்சரியத்தைப்
பிடித்தெல்லாம் போதும்
வெளிறிப்போய் இருந்தாலும்
வேர்கள் அழகானவைதான்
பூக்கள் சில நாளைக்கு
நீரை உறிஞ்சட்டும்
மண்ணுக்கு இப்போது
மலடு தட்டிப் போகிறது
குழந்தைகளின் பிறப்பு
கொஞ்ச நாள் நிற்கட்டும்
இழந்து விட்ட காற்றின்
இருப்பை கணக்கெடுப்போம்
பூமிக்கும் ஈர்ப்பு
புளித்துப் போயிருக்கலாம்
வெப்பத்தை நெருப்பு
விவாகரத்து செய்து விட
ஆகாயப் படுக்கை
அலங்கோலமாயிற்று
நிர்க்கதியாய் நிலத்துக்கு வந்த
வெப்பத்தைத் தாங்க
மனித தோலில்
ஆடை கொள்ள
ஆடுகள் கூட அஞ்சுகின்றன
பிரமாண்டமான ஆலைகளின்
பீரங்கிகளில் வழிந்த
மனித மூத்திரத்தை
மேகம் களவெடுக்க
உலகம் மீட்டதில்
அமிலக் குளியல்
பஞ்சத்தில் அடிபட்டு
பூதங்களுக்குள் யுத்தம்
எஞ்சியதையும் அழிக்க
ஆதி சிவன் ந்ருத்தம்
தந்திரத்தின் உச்சத்தில்
தனித்துவிட்ட மனிதம்
அந்தரத்தில் போகையிலே
அற்றுவிடும் புனிதம்
ஈர்ப்பை விட...பூமிக்கு
உயிர்ப்புத்தான் தேவை
அண்ணாந்து தேடியதில்
ஆனதொன்றும் இல்லை....அதால்
பூமியைப் பிளந்து
புகுந்து தேடுவோம்
எங்காவதொரு வாழ்வு
இருக்கும்.....நிச்சயமாய்!

ஆனந்தபிரசாத்.
    • Kiruba Pillai பூமியைப் பிளந்து
      புகுந்து தேடுவோம்
      எங்காவதொரு வாழ்வு
      இருக்கும்.....நிச்சயமாய்!//;(+:)+mhum ...
      Sunday at 11:15pm · · 1
    • Emiliyanus Judes பூமியைப் பிளந்து

      புகுந்து தேடுவோம்

      எங்காவதொரு வாழ்வு
      Yesterday at 3:56am · · 1
    • Thiru Thirukkumaran
      பிரம்மச்சரியத்தைப்

      பிடித்தெல்லாம் போதும்

      வெளிறிப்போய் இருந்தாலும்
      ...

      வேர்கள் அழகானவைதான்

      பூக்கள் சில நாளைக்கு

      நீரை உறிஞ்சட்டும்//
      See More
      Yesterday at 5:45am · · 1
    • Nadchathran Chev-Inthiyan How come ur Poetry in Indian TamilPoetry's style and language
      Yesterday at 8:32am · · 1
    • Arasan Eliyathamby இன்னும் கொஞ்ச நாள் தான்
      இருந்து விட்டால் போதும்.... நன்றாக இருக்குது, வாழ்த்துக்கள் ! அப்புறம் செவிந்தியன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் நண்பரே ?
      Yesterday at 10:52am · · 1
    • Vj Yogesh ‎"தந்திரத்தின் உச்சத்தில்

      தனித்துவிட்ட மனிதம்

      அந்தரத்தில் போகையிலே

      அற்றுவிடும் புனிதம்"
      Yesterday at 11:00am · · 1
    • Vj Yogesh
      ‎"....அதால்

      பூமியைப் பிளந்து

      புகுந்து தேடுவோம்
      ...

      எங்காவதொரு வாழ்வு

      இருக்கும்.....நிச்சயமாய்!"
      See More
      Yesterday at 11:01am · · 1
    • George Singarajah இந்தக் கவிதை மழையில் நனைந்து நான் என்னை iznthen
      Yesterday at 2:28pm · · 1
    • Anand Prasad Arasan Eliyathambyசெவ்விந்தியர்களுடைய பாசை(ஷை)
      எனக்குத் தெரியாது நண்பரே. நான்
      எலு(ழு) த்துப் பிலை(ழை) கலை(ளை)
      எதிர்ப்பவன். தமில்(ழ்) மொலி(ழி) யை ந(நே)சிப்பவன்.
      22 hours ago · · 3
    • Arasan Eliyathamby உங்களுக்கு நல்ல நகைசுவை உணர்வு உள்ளது ! அப்புறம் என்ன அதிலயும் ஆனந்தமா புகுந்துவிளையாடுங்க Anand Prasad !
      15 hours ago · · 2

எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

by Anand Prasad on Friday, August 10, 2012 at 9:38pm

இவர்களுக்கு இயற்கை
கற்றுக்கொடுத்தது என்ன?
இவர்கள் இயற்கையிலிருந்து
கற்றுக்கொண்டதும் என்ன?
கேள்விக்குறிகளைத் தவிர!
குறிப்பில்லாது எதையெதையோ
குறித்தெழுதும் போதெல்லாம்
ஆச்சர்யக்குறிகள்
அகல விரிகிறது....
பேச்சில்லை....பின்னும்
பிறிதோர் செயலுமில்லை
சுவாசத்தில் எப்போதும்
சிதைந்து போகும் காற்றுக்கு
விசுவாசமாயிருக்கும்
விதியிவர்க்கு வாய்த்ததில்லை
சினைப்படுத்த முடியாத
சிந்தனைகளுக்காக
முனைப்பெடுத்துப்போகும்
முற்போக்குவாதிகளாய்...
யாருக்கு யார்....என்ன வியாபாரம்?
புரிந்தவைகள் தேராநிலையில்
தெளிவு பெறவேண்டி
பாரெங்கும் அலையும்
பைத்தியக்கார்களாய்....
சமூக அலகுகளின்
சிறிய சமன்பாட்டுக்குள்
அகப்படாத ஜீவன்கள்....
அதிகம் புரிந்துகொள்ள
வசப்படாத ஆத்மாக்கள்....
வாழ்க்கை நதிப்போக்கினிலே
இணைந்து போய் யார்க்கும்
இலகுவில் லபிக்காத
பயற்றம் முளைகள்...
புதிய புதியதாய்
உயிர்ப்படைந்து
வெளிக்கிளம்பும்
உற்சாக கருவூலங்கள்.......
ஆனந்தபிரசாத்.

    • Vj Yogesh
      ‎"சமூக அலகுகளின்

      சிறிய சமன்பாட்டுக்குள்

      அகப்படாத ஜீவன்கள்....
      ...

      அதிகம் புரிந்துகொள்ள

      வசப்படாத ஆத்மாக்கள்...."
      See More
      August 10 at 9:46pm · · 1
    • Giritharan Navaratnam
      இவர்களுக்கு இயற்கை
      கற்றுக்கொடுத்தது என்ன?
      இவர்கள் இயற்கையிலிருந்து
      கற்றுக்கொண்டதும் என்ன?
      கேள்விக்குறிகளைத் தவிர!
      ...

      நண்பர் ஆனந்த பிரசாத் பொதுவாக 'எழுத்தாளர்களைப்' பற்றி இவ்விதம் கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இயற்கை கற்றுக்கொடுத்ததை கற்றுக்கொன்டு மாபெரும் படைப்புகளைத் தந்த பல படைப்பாளிகள் இருக்கிறார்களே! இவர்களது படைப்புகளெல்லாம் புலப்படுத்துவதென்ன? இவர்கள் கற்றுக்கொண்டது கேள்விக்குறிகளை அல்ல, இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான புரிதல்க்ளையல்லவா. இயற்கையைக் கூர்ந்து அவதானித்து (இயற்கை என்று குறிப்பிடும்பொழுது நான் இங்கு நாம் வாழும் இந்த உலகு, பிரபஞ்சம், வாழும் சமூகம்.. என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளேன்) எத்தனை எழுத்தாளர்கள் அரிய படைப்புகளை , புனைவுகளை வழங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் எவ்விதம் இவர்கள் கற்றுக்கொண்டது கேள்விக்குறிகளைத் தவிர என்று அறுதியாக, உறுதியாகக் கூற முடியும்?

      சினைப்படுத்த முடியாத
      சிந்தனைகளுக்காக
      முனைப்பெடுத்துப்போகும்
      முற்போக்குவாதிகளாய்...

      லெனின், காஸ்ட்ரோ, மார்க்ஸ்,மாவோ போன்றவர்களும் எழுத்தாளர்களே. அபுனைவுகளை வழங்கியவர்கள் இவர்கள். மார்க் , லெனின், மாவோ, காஸ்ட்ரோ போன்றவர்கள் முற்போக்குவாதிகள். இவர்களின் சிந்தனைகள் சினைப்படுத்தப்பட முடிந்த சிந்தனைகள். சினைப்படுத்தக் கூடிய சிந்தனைகளுக்காக முனைப்பெடுத்துப் போனவர்கள் இவர்கள். இன்றும் எத்தனையோ படைப்பாளிகள் உலகெங்கும் சினைப்படுத்த முடிந்த தங்கள் சிந்தனைகளால் முனைத்தெழுந்திருக்கின்றார்கள்.

      எனவே நண்பர் பொதுவாகக் குறிப்பிடுவதுபோல் தென்பட்டாலும், குறித்த சில நாடுகளில் வாழும் சிலரை மனதில் வைத்தே சொல்லியிருப்பதாகக் கருதுகின்றேன்.
      See More
      August 10 at 10:14pm · · 1
    • Thiru Thirukkumaran
      சினைப்படுத்த முடியாத

      சிந்தனைகளுக்காக

      முனைப்பெடுத்துப்போகும்
      ...

      முற்போக்குவாதிகளாய்...

      யாருக்கு யார்....என்ன வியாபாரம்?//
      See More
      Saturday at 7:03am · · 2
    • Amalraj Francis I like it.. Nice sir.
      Saturday at 12:19pm · · 1
    • Anand Prasad Giritharan Navaratnamஇந்த இருபத்தோராம் நூற்றாண்டில்
      இதமாக, படைப்பாளியின் ஆத்மாவை
      இரணமாக்காது கருத்துப்பகிர்ந்த தங்கள்
      உயர்ந்த பண்பை வெகுவாக நேசிக்கிறேன்.
      Saturday at 6:09pm · · 1

Syllables from a serenitarian

Syllables from a serenitarian

By Anandprasad

Playing music next to my ears
pretty perfect.... then you bite
Living with nature never let me down
Renew my vows at the 'Matamajaw' site
Green..... nothing but green....
cedar trees
giving me the energy
to prolong the last call
Every breath I take
coming from the hill
I wish to live forever....
the town of 'Causapscal'
I used to live with people...
in useless cities
Nothing but comfort
besides all the corruption
Here I am sitting comfortably
on 'le gazon'
Contemplating and look up
for God' s resurrection
Believe in God...
may be superstitious
Until experiencing the wilderness...
the will of his creation
immersed in ignorance
and our vicious thinking
erupted and causing
for the moral cremation
'Brugas' from the tiny little bee
Hopping around....
and looking where to be
tiny little flowers
all dressed up for them to see
Exchange their love
for their beauty for honey
Enjoy their transaction
without counting money
If these credentials
applicable to us
we could proclaim that
God created species
The sun and the shades
would never let us down
Neither war...nor.... conflicts
wouldn't let us to be adorned

Anandprasad.

'Matamajaw': Junction where the river of Causapscal and Matapedia meet,
where the native Indians lived peacefully....and then encroached by the European settlers.
'Causapscal': Rocky and shiny in the Mi'kmaq language.
'Brugas': Fast modulation in South Indian Carnatic classical music.

மாறுதல்

மாறுதல்

 

இருட்டு ஒரு

பகல் செய்தது

எல்லோருக்கும் முகங்கள்

இருந்தன அப்போது

இரசம் பூசிய கண்ணாடிகள்

கண்டுபிடிக்கப்படவில்லை

ஒருவரை ஒருவர் பார்த்து

முகங்களை

புரிந்து கொண்டார்கள்

வெளிச்சம்

ஒரு இரவு செய்தது

முகங்களை யாரும்

வைத்திருக்கவில்லை......

முகம் தேடும் கண்ணாடிகள்

உருவாகின

ஒளி....

அஞ்ஞாதவாசம் போயிற்று

கண்களுக்கு

முகங்கள் புலப்படவில்லை

காலம் இரவைக்

கரைத்துக் கொண்டிருந்தது

எஞ்சிய முகங்களுக்காக

இருட்டு

மீண்டுமொரு பகல்

தயாரித்துக் கொண்டிருக்கிறது

ஆனந்தபிரசாத்.
    • Thiru Thirukkumaran காலம் இரவைக்
      கரைத்துக் கொண்டிருந்தது
      எஞ்சிய முகங்களுக்காக
      இருட்டு
      மீண்டுமொரு பகல்
      தயாரித்துக் கொண்டிருக்கிறது//
      July 30 at 9:47pm · · 4
    • Vj Yogesh ம்ம்.... முகங்களை புரிவதிலேயே காலம் கழிகிறது..! யதார்த்தம் boss!
      July 30 at 9:53pm · · 2
    • Ravi Kathir True. very hard to understand the people.
      July 30 at 10:39pm · · 1
    • Anand Prasad That's why we are all so comfortable with face book! Ravi Kathir
      July 30 at 10:54pm · · 1
    • Ravi Kathir If we all are comfortable, that mean we have something in common.
      July 30 at 10:57pm ·
    • Anand Prasad Yes...faceless!
      July 30 at 10:59pm ·
    • Emiliyanus Judes
      காலம் இரவைக்

      கரைத்துக் கொண்டிருந்தது

      எஞ்சிய முகங்களுக்காக
      ...

      இருட்டு

      மீண்டுமொரு பகல்

      தயாரித்துக் கொண்டிருக்கிறது
      See More
      July 31 at 2:22am · · 1
    • Kannathasan Krishnamoorthy மனித வாழ்வை அன்றிலிருந்து இன்றுவரை படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் (கண்ணாடி) கவிதை. ஆழமான வரிப்பிரயோகம் மிக அருமை...
      July 31 at 6:17am · · 2
    • Pa Sujanthan வெளிச்சம்

      ஒரு இரவு செய்தது

      முகங்களை யாரும்

      வைத்திருக்கவில்லை......
      July 31 at 1:16pm · · 1
    • Kiruba Pillai பகலும் இருளுக்குள் ...தான் . ....அருமை ..நண்பரே ..
      July 31 at 11:32pm · Edited · · 1
    • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ஒளி....
      அஞ்ஞாதவாசம் போயிற்று..... அருமை
      August 2 at 1:12pm · · 1
    • Jegatheesan Subramaniam மீண்டுமொரு பகல் - ஆனந்தபிரசாத்!
      August 2 at 8:16pm · · 1
    • Vasudevan Kanagasabai கவிதை நன்றாகப் பிடித்திருக்கிறது. காலத்தைப் பற்றிய ஆழமான புரிதலே காலமின்மையைக் காட்டி நிற்கிறது. ஆத்மீகம் என்பதே இருத்தலின் மீதான தொடர்ச்சியான கேள்விகளும் அதிசயிப்புகளும் தான். கவிதைக்கு நன்றி. இப்போது தெருக்கரையோரம் பூத்திருக்கும் மலர்களை இன்னொரு அர்த்தத்துடன் பார்ப்பேன். இதமான வெயில் வேறு காய்கிறது. நல்ல நாளாகட்டும்.
      August 3 at 3:47am · · 2
    • Anand Prasad கருத்துப்பகிர்ந்த அனைத்து
      கவிதையார்வலர்களுக்கும் --- எனது
      விருப்புடன் கூடிய நன்றிகள்.
      August 7 at 7:05pm · · 2
    • Thirumavalavan Kanagasingam ம்... நன்றாயிருக்கிறது. தொடருங்கள்.
      19 hours ago · · 1