Monday, June 17, 2013

உறைவிடம்


 



எனது சாளரத்தின் வழியாக

வரும் காற்றைக்கூட....நான்

நம்பியதில்லை

நீரோடித்தெளிந்த நிலைகளையும் கூட...!

பாடிப்பாடியே...

குரல் நாண்கள் அறுந்த பின்னும்

வீடு சுமக்கும் எத்தனங்கள்...

இந்த நாள் மிதக்கும்

என் சுமைகள் ஆழ்ந்தமிழாது......

ஆழ்கடல் பூக்கள்

என்னைக் கரை தள்ளும்.....

இயங்கியலின் சாராம்சம்

இருப்பை நிலை நிறுத்தும்....?

கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.

என்னை பரிகசித்தேகும்

ஆற்றின் சுழிப்பிற்குள்

அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

வேருக்கடியில்........

மனிதரை புரிந்துகொண்டேன்.

ஆனந்தப்ரசாத்.




  • Rajaji Rajagopalan எனது சாளரத்தின் வழியாக

    வரும் காற்றைக்கூட....நான்

    நம்பியதில்லை...//


    தொடக்கமே சிந்திக்கவைக்கிறது!

    .... ஆழ்கடல் பூக்கள்

    என்னைக் கரை தள்ளும்.....//

    இப்போது நம்பிக்கை துளிர்க்கிறது!
    இறுதியில்...

    மனிதரை புரிந்துகொண்டேன்...//

    திருப்தியான முடிவு! சிந்தனைக்கு நிறைய வேலை தருகிறார், ஆனந்த்.

  • Nathan Gopal ஏதோவொரு நாணலின்
    வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன். //கவிதை மிகவும் நுண் தன்மையுடன் தூக்கலாக எழுகிறது.

  • Pena Manoharan அடடா...’என்னைப் பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு...ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்... மனிதரைப் புரிந்து கொண்டேன்’ படமெடுத்தாடுகிறது படிமப் பாம்பு.அருமை.வையைக் கரையில் வாசம் செய்யும் அநுராதபுரத்தானின் நல்வாழ்த்துக்கள்.

  • Subramanian Ravikumar உள் முகப் பயணம்...முடிவற்றது வாழ்வெனும் தேடல்...

  • Thiru Thirukkumaran இயங்கியலின் சாராம்சம்

    இருப்பை நிலை நிறுத்தும்....?

    கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.//

  • N.Rathna Vel அருமை.

  • Vanitha Solomon Devasigamony பாடிப்பாடியே...
    குரல் நாண்கள் அறுந்த பின்னும்
    வீடு சுமக்கும் எத்தனங்கள்...

    என்னை பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு....

    ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன்.

  • VJ Yogesh 'ஆற்றின் சுழிப்பிற்குள்

    அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

    வேருக்கடியில்........
    ...See More

  • Kuppilan Shanmugan valvin thedalai arumaiyagach solliullirkal,

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "என்னைக் கரை தள்ளும்.....
    இயங்கியலின் சாராம்சம்
    இருப்பை நிலை நிறுத்தும்....?" நுணுகி அனுபவிக்க வேண்டிய கவிதை. வாழ்த்துக்கள்

  • Santhiya Thiraviam ஆற்றின் சுழிப்பிற்குள்

    அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்

    வேருக்கடியில்........


    மனிதரை புரிந்துகொண்டேன்.

    Arumai Aumai

  • Santhiya Thiraviam வாழ்த்துக்கள்

  • Jeyarany Norbert பாடிப்பாடியே...
    குரல் நாண்கள் அறுந்த பின்னும்
    வீடு சுமக்கும் எத்தனங்கள்...
    என்னை பரிகசித்தேகும் ஆற்றின் சுழிப்பிற்குள் அகப்பட்டு....
    ஏதோவொரு நாணலின் வேருக்கடியில்........
    மனிதரை புரிந்துகொண்டேன்.அருமை வாழ்த்துக்கள்.

  • Subramaniam Kuneswaran "என்னை பரிகசித்தேகும்
    ஆற்றின் சுழிப்பிற்குள்
    அகப்பட்டு...."

  • Kannathasan Krishnamoorthy கடவுளாலையே மனிதரைப் புரிந்து கொள்ள முடியாத இவ்வுலகில் நீங்கள் என்னமோ மனிதரைப் புரிந்து கொண்டது சாதனை தான்.வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் ஆழமான கவிதைக்கு...

விசைxநேரம்=தூரம்.

 


புவியீர்ப்பில்லை....எனில் நான்

பறந்திருப்பேன்.....மிதந்திருப்பேன்!

புனிதத்தின் உச்சங்களை

தொடுகையிலே வியந்திருப்பேன்!

கவி....நீர்த்துப்போயிருக்கும்.....

கவலைகளும் கூடவே.....

கனலோச்சும் வெம்மைகளில்

கதறியழ வேண்டாமே....

அவிழாத மருக்கொழுந்தின்

ஆழ் மணத்தை துறந்திருப்பேன்

ஆதார சுருதியற்ற

ஒசையென நிறைந்திருப்பேன்

தவியாமல் தவிக்கின்ற

தாளாண்மை தள்ளியொரு

தனியாளாய் ககனவெளி

திமிரோடு நின்றிருப்பேன்......

வேரூன்றிப் போய்விட்ட

பாட்டியும் முப்பாட்டனதும்

வீரியங்கள் உரமாகி

விகசித்து....நான் பிறந்த

பாருக்குள் கால்பதித்த

பலமென்ற போர்வைக்குள்

பதியங்கள் கொண்டதொரு

பரிணாம வீச்சினுள்ளே

ஊர்கண்டு.....உயிர்கண்டு....

உற்றார் உறவுகண்டு....

உன்னதங்கள் தான்கண்டு....

உயிர்ப்பில் களித்திருக்க.....

யார் கண்டார்...? ஈர்ப்பில்

யாக்கையுமோர் பணயமென

ஆகுமென.....? வேற்றுலகில்

ஆறுமொரு பயணமென?

ஆனந்தப்ரசாத்
  • Nathan Gopal நான் பிறந்த
    பாருக்குள் கால்பதித்த
    பலமென்ற போர்வைக்குள்
    பதியங்கள் கொண்டதொரு
    பரிணாம வீச்சினுள்ளே... கவிதை வீச்சு உள்ளுணர்வை உசுப்புகின்றது.
  • Thiru Thirukkumaran யார் கண்டார்...? ஈர்ப்பில்

    யாக்கையுமோர் பணயமென

    ஆகுமென.....? வேற்றுலகில்


    ஆறுமொரு பயணமென?//
  • Rajaji Rajagopalan ககன வெளிக்குள் ஒரு சுகமான பயணம். கற்பனைப் பயணம். இதனால் எதையெல்லாம் துறக்கவேண்டிவருமோ அவற்றிலும் பார்க்க இனிமையான புதியனவற்றைக் காணவைக்கும் இதமான பயணம். இது ஆனந்தின் பயணம். கூடவே நாமும் பயணிக்கிறோம். அந்த வேற்றுலகில் வாழ ஒரு சில கணங்களாவது வாய்ப்புத் தந்தாரே, அதுவே போதும்!
  • VJ Yogesh கவியீர்ப்பு இல்லையெனில் -நான் எப்போதே கனவு போல்க் கரைந்திருப்பேன்....அற்புதமான கவிதை அண்ணா...!
  • Jeyarany Norbert புவியீர்ப்பில்லை....எனில் நான்

    பறந்திருப்பேன்.....மிதந்திருப்பேன்!
    அவிழாத மருக்கொழுந்தின்
    ...See More
  • Vanitha Solomon Devasigamony ஊர்கண்டு.....உயிர்கண்டு....
    உற்றார் உறவுகண்டு....
    உன்னதங்கள் தான்கண்டு....
    உயிர்ப்பில் களித்திருக்க.....
    யார் கண்டார்...? ஈர்ப்பில்

    யாக்கையுமோர் பணயமென
    ஆகுமென.....? வேற்றுலகில்
    ஆறுமொரு பயணமென?
  • Jegatheesan Subramaniam திமிரோடு....புனிதத்தின் உச்சங்களை தொடுகையிலே!
  • Seelan Ithayachandran 'காலம் - வெளி' கடந்த ஏதோவொன்றின் வாசலில் நின்று அதனை எட்டிப் பார்க்கும் உணர்வினை தருகிறது நண்பா!......அழிந்து போகாமல் இன்னும் இருக்கிறது அந்தத் தேடல்...