திருடித்தின்று
பசியாறுகிற சுகங்களை......
காலம்...
எனது காலங்களை
அபகரித்து அனுபவிக்கிறது!
வாழ்க்கை ஒன்றும் வட்டமில்லை
நேர் கோடுதான்
அ....விலிருந்து ஃ......வரை......!
உயிரின் தலையெழுத்து
சமாந்தரக்கோடுகள்
நிரந்தரமில்லை
இறுதிப்புள்ளிவரை இரு கோடுகள்
சேர்ந்திருந்ததாக
வரலாற்றுக் குறிப்புமில்லை
இரத்த உறவுகள்
இரத்தான இழவுகள்
சொந்தம் பந்தம் நட்பு பகை.....
காலாவதியான காசோலைகள்.....
வங்கிக்கணக்கை மூடிவிட்டு
எனது சாம்ராஜ்யத்தில்
முடி சூட்டிக்கொண்டிருக்கிறேன்!!!
இடிபாடுகளுக்குள் இருந்து
புறப்பட்டு வெளியேறியவன்
இன்றும்
கோபுரத்தின் உச்சியில்....
இடிதாங்கியாகத்தான்.
ஃ....ஐ நோக்கி...மெதுவாக.....!
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment