Friday, March 15, 2013

கண்ணிமைக்கும் பொழுதில்.....!


கண்ணிமைக்கும் பொழுதில்
கடலின் அலைகள் கதை முடிக்கும்
சின்ன அரும்புகளோ
கரையில் விழிநீர் கதையெழுதும்.......
(கண்ணிமைக்கும்)
ஓலைகளை ஓடுகளாய் மாற்றியவர்
ஒரு நாள் ஒருபொழுதில்
ஓலங்களை வரவுவைத்து ஓய்ந்ததென்ன
தரையில் ஆழ்கடலில்
மாளாத சோகத்தில் மலரும் பூக்கள்
மாறாது மாறாதினி வளரும் நாட்கள்....
இதில் மொழியென்ன
மதமென்ன
நிறமென்ன மனிதா......
(கண்ணிமைக்கும்)
வறுமையிலும் வாழ்வினையே தேடியவர்
வளமே நாடியவர்
பிறவி பெருங்கடலை நீந்துமுன்னே
பிணமாய் ஆனவர்கள்
தெளிவில்லை எண்ணிக்கை
தெரியாத நம்பிக்கை
இனியில்லை இனியில்லை
இதுதான் உண்மை....
இதில் மொழியென்ன
மதமென்ன
நிறமென்ன மனிதா......
(கண்ணிமைக்கும்)

  • Singarajah George how long its been going on.....
  • Pena Manoharan 'சூர சம்ஹாரத்தின் சூத்திரம் தெரியும்/இந்த ஈர சம்ஹார்த்தின் இதிகாசம் என்ன?.பிறவிக்கடல் நீந்துமுன் எத்தனை குளம்,குட்டைகள்,காட்டாறுகள்.இவைகளைத் தாண்டித்தான் தளிக்கிறது மனிதம்.வையையின் வாழ்த்துக்கள்.
  • Thiru Thirukkumaran இதுதான் உண்மை....
    இதில் மொழியென்ன
    மதமென்ன
    நிறமென்ன மனிதா...//
  • Subramanian Ravikumar மனிதத்துக்கான நல்ல கவிதை ஆனந்த்.. வாழ்த்துக்கள்...மனித குலம் வாழ..
  • VJ Yogesh நன்றாகவுள்ளது அண்ணா... விரைவில் இதனை இசை வடிவில் கேட்க ஆவல்!
  • Vathiri C Raveendran பிணமாய் ஆனவர்கள்

    தெளிவில்லை எண்ணிக்கை

    தெரியாத நம்பிக்கை
    ...See More
  • Kiruba Pillai intha kavithaiyai parththathum naan oru isiayaiyum parthen intha varikalil . arumaiyaana karuththu . matham ennum maayam sumanthu thirivorkku avasiyamaaka poi sera vendiyathu . nanri kavignare
  • மன்னார் அமுதன் //இதில் மொழியென்ன
    மதமென்ன
    நிறமென்ன மனிதா....// அருமையான கவிதை
  • Muthulingam Kandiah உண்மையான வாழ்க்கை நிலையை உணர்வு பூர்வமான வடிவத்தில் தெளிவுடன் தந்துள்ளது பாராட்டுக்குரியது....இசைவடிவத்தில் வந்தால் அனைவரும் அறிந்து கொள்வார்கள்
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "பிறவி பெருங்கடலை நீந்துமுன்னே
    பிணமாய் ஆனவர்கள்
    தெளிவில்லை எண்ணிக்கை.." துடிக்கிறது மனது வரிகளில் மூழ்கையில்.

Wednesday, March 6, 2013

கூனல் எனது பிறப்புரிமை

 



யாருக்கோ எப்போதோ

எடுத்துரைத்த ஞாபகம்....

என்னுடைய முதுகில்

ஏற்பட்ட கூனலை நிமிர்த்துவது பற்றி....

யாரென்று நினைவில்லை

எத்தனையோ பேருக்கு

எப்படியெல்லாம் சொன்னேன்?

அத்தனை முகங்களும்

அடியோடு மறந்து போய்...

கூனல் மட்டும்

அப்படியே இருக்கிறது!

நிமிர வழி தெரிந்தும்

பயமாக இருக்கிறது

யார் யாரோ வைத்தியர்கள்

பச்சிலையும் மூலிகையும்

இன்னும் இருக்கின்ற

உலகத்துக் குழைகளெல்லாம்

அடியடியென்று அடித்தும்

அசையவில்லை கூனல்

பரியாரி தந்த பதமான எண்ணைமுதல்

அரபுநாட்டில் உள்ள

அதியுயர்ந்த எண்ணை வரை...

போட்டு உருவியும்....

போகவில்லை...என்றாலும்

கூனல் நிமிரக் கூடிய வழிகளெல்லாம்

நான்றிவேன் நன்கு

நாலுபேருக்கெடுத்துரைப்பேன்

ஆனாலும் எனக்கு

பயமாக இருக்கிறது

நானாக நிமிர்வதெல்லாம்

நடக்காது ஜென்மத்தில்....

பரியாரி விடமாட்டான்

எனக்கு கூனல்

இருக்கின்ற வரைக்கும்தான்

தனக்கு பிழைப்பென்பான்

தடியொன்றும் வைத்துள்ளான்.....

பெருந்தன்மையோடு நான்

கூனிக்கொண்டிருக்கிறேன்.

ஆனந்தபிரசாத்.
 
  • Narayana Moorthy கனடாவில் 'நிமிர்ந்து' 'நிற்கும்' 'கவிஞரும்' நீர்தான் ஐயா...!!!
  • VJ Yogesh //பரியாரி விடமாட்டான்

    எனக்கு கூனல்

    இருக்கின்ற வரைக்கும்தான்


    தனக்கு பிழைப்பென்பான்//
  • Vathiri C Raveendran கூனல்......
    அரசியல் ஊனங்களையும்
    பேசுகிறது.
  • Power Ful Brain //நானாக நிமிர்வதெல்லாம்

    நடக்காது ஜென்மத்தில்....

    பரியாரி விடமாட்டான்


    எனக்கு கூனல்

    இருக்கின்ற வரைக்கும்தான்

    தனக்கு பிழைப்பென்பான்// இது பல அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.

    கூனல் = மக்கள்.
    பரியாரி = அரசியல்வாதிகள்.
  • Arasan Elayathamby ஒரு வயதானவர் குனிந்து கூனலாக கம்புஉண்டி நடந்து போனபோது ஒரு இளஞ்சன் என்ன தாத்தா குனிந்து தேடுறிங்க எண்டு பரிகாசமாய் கேட்டதுக்கு அவர் "இழந்துவிட்ட இளமையைத் தேடுகின்றேன் "எண்டு சொன்னாராம்!
  • Thiru Thirukkumaran பெருந்தன்மையோடு நான்
    கூனிக்கொண்டிருக்கிறேன்.//
  • Pena Manoharan கூனலும் நிமிர்வென்று கூறும் கவிதை.அருமை.வாழ்த்துக்கள் ஆனந்த் பிரசாத்.
  • Vanitha Solomon Devasigamony கூனல் நிமிரக் கூடிய வழிகளெல்லாம்
    நானறிவேன் நன்கு
    நாலுபேருக்கெடுத்துரைப்பேன்
    ஆனாலும் எனக்கு
    பயமாக இருக்கிறது

    நானாக நிமிர்வதெல்லாம்
    நடக்காது ஜென்மத்தில்...
  • Kiruba Pillai வாவ் ...தமிழ் பெருமை கூனலா ????அருமை கவிதை ஆனந்த பிரசாத் ..என்னே கருத்து ..அருமை ..