Tuesday, June 5, 2012

என் முற்றத்தின் இறுதி முத்தம்.



நான் உன்னில்......நீ என்னுள்.....
உமிழ்ந்த அன்பின்
நறுநீர் உறைந்திருக்கும்!!! என்ப தாகத்
தானிந்த நாள்வரையில் தாங்கி வந்தேன்
தறுவாய்கள் தவறாகித் தளர்ந்த போதில்
வானின்றிழிந்த எரி சரங்க ளாலென்
வாழ்வுருகிப் போனதென விருத்தம் பாட
ஏனிங்கு விண்முகடும் எரிந்த நீயும்
இயலாமை சொல்லியெனை ஏங்க வைத்தாய்?
ஓசையில்லா என்மனதைச் சொல்ல வென்றென்
ஓசைகளை வேண்டியொரு யாகம் செய்தேன்
யாசித்தேன்....பாஷைகளை.......திறந்து போடு!
யாருடனும் பேசவொரு ஏது வாகும்
வாசிப்பிற் குழலாகும்.....வளைந்து போகும்
வசிப்பிற்கும் வலியதொரு வழிய தாகும்
நேசிப்பில் நீர்சுரக்கும்....நேத்திரங்கள்
நின்றுநெடு நாள்கடக்கும்......நீடு வாழும்!
சூழ்நிலையின் சூக்க்ஷூமத்தால் நானோர் கைதி
சுந்தரங்கள்....சுதந்திரங்கள் சிதைந்த போதும்
வாழ்முனைப்பு வேறுவழி யின்றி ஏகும்
வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்!!!
காழ்ப்புமனப் படுதாவில் கவிதை தீட்ட
யாப்புமனம் ஒண்ணாது.........யந்திரம் போல்
ஆழ்மனத்தே நீயுமிழ்ந்த அதர பானம்
ஆற்றுப்படுத்துமென ஆறி நிற்பேன்.
ஆனந்தபிரசாத்.


  • 3 shares3 shares
    • Sriranjani Vijenthira சோகமும் காதலும் ---- நன்றாக இருக்கிறது
      May 26 at 10:48pm · · 1
    • Vj Yogesh ‎"ஓசையில்லா என்மனதைச் சொல்ல வென்றென்

      ஓசைகளை வேண்டியொரு யாகம் செய்தேன்

      யாசித்தேன்....பாஷைகளை.......திறந்து போடு!" ......................." நேசிப்பில் நீர்சுரக்கும்....நேத்திரங்கள்

      நின்றுநெடு நாள்கடக்கும்......நீடு வாழும்! இவ் வரிகளில் வழுக்கி வீழ்ந்தேன் bro!!
      May 26 at 11:19pm · · 1
    • Cheran Rudhramoorthy பிரசாத், "சுந்தரங்கள்....சுதந்திரங்கள் சிதைந்த போதும்" என முடிக்க வேண்டாம்:இதோ மீதி:
      May 27 at 12:30am · · 2
    • Cheran Rudhramoorthy சுந்தரங்கள் சுதந்திரங்கள் சிதைந்த போதும்
      தந்திரங்கள் எப்போதும் கவிஞர்க்குண்டு! அந்தரத்தில் ஆடுவது காதல் அல்ல; ஓசையிலும் காமம் உண்டு ;உனக்கும் உண்டு!வெந்தழியும் உடம்பென்பார் அவர்;நான் ஒப்பேன்;வேறுவகைக் காமம் உண்டு; வேறும் உண்டு!!!!
      May 27 at 12:39am · · 4
    • அந்தரத்தில் ஆடுவது காதல் ..............................
      May 27 at 1:22am ·
    • Thiru Thirukkumaran நேசிப்பில் நீர்சுரக்கும் நேத்திரங்கள்
      நின்றுநெடு நாள்கடக்கும் நீடு வாழும்!// வாழும்..
      May 27 at 4:40am · · 1
    • Amalraj Francis அருமை
      May 27 at 11:15am · · 1
    • Abdul Nazeer · Friends with Memon Kavi and 2 others
      I really enjoyed reading this poem. Lovely!
      May 27 at 11:46am · · 1
    • Kannathasan Krishnamoorthy ‎'சுதந்திரங்கள் சிதைந்த போதும்
      வாழ்முனைப்பு வேறுவழி யின்றி ஏகும்
      வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்'அருமை
      May 27 at 7:54pm · · 2
    • Anand Prasad Cheran Rudhramoorthyகற்றார்க்குக் கற்றாரில் காமம் உண்டென்
      கால் தழைத்த மண்ணில் மிகக்காமமுண்டு
      மற்றாங்கே மீளவொரு காமமுண்டு.....
      மறைந்தால் என் மண்தழுவும் காமமுண்டு.
      நன்றி சேரன்.
      May 27 at 10:22pm · · 5
    • Emiliyanus Judes அன்பின்

      நறுநீர் உறைந்திருக்கும்
      May 29 at 2:34am · · 1
    • ஏன் இப்படி கண்ட இடத்தில் வாயை வைப்பானேன். அப்புறம் புண்ணாய்ப் போச்சுன்னு புலம்புவானேன்.
      May 29 at 4:58am ·
    • ஏம்பா இப்படி வடிவேலு ரேஞ்சுக்கு உள்ளே வந்து தொந்திரவு பண்ணுகிறாய் என்று திட்டாதீங்க.
      May 29 at 5:00am ·
    • பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
      வாலெயிறு ஊறிய நீர்.
      May 29 at 8:05pm ·
    • Anand Prasad Ashokha Thegreateதங்கள் உலகம் தழுவிய தமிழறிவுக்கும்.......
      இலக்கியம் சார்ந்த புரிந்துணர்விற்கும்......
      வடிவேலை மிஞ்சிய கடிவேலனாக நீங்கள்
      பரிணமித்ததற்கும் எந்தன் முடிதாழ்த்தி வணங்குகிறேன்!!!
      அறிவில் ஆதவன் நீங்கள்.
      அயல்வளவு மேய்ந்து
      குறிப்பெழுதிப் போன குரு!!!
      May 29 at 9:26pm · · 1
    • என்வளவுச் சூரியஒளி, அயல்வளவுச் சூரியஒளி என்றில்லை நண்ப, குறளும் யார் வளவிற்குரியதுமல்ல. தங்கள் கவிதையில் தொக்கிநிற்கும் சமூக அக்கறையையும் கண்டிருந்தேன். பாராட்டவே குறள் பதிந்தேன்.
      May 29 at 9:36pm · · 1
    • Anand Prasad என் மனவுணர்வின் வெளிப்பாடான இவ்வரிகளை
      வரித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
      உங்கள் மனவீணையில் ஒருஸ்வரமாவது அதிருமேல்
      தங்கும் மனத்தின் தவம்.
      May 29 at 10:04pm · · 1
    • உங்கள் மொழியாளுமை மகிழ்விக்கிறது. உணர்வுகளை காட்சி செய்யும் வல்லமை பாராட்டுக்குறியது.
      Yesterday at 12:37am via mobile · · 1
    • Pa Sujanthan வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்!!!
      காழ்ப்புமனப் படுதாவில் கவிதை தீட்ட
      யாப்புமனம் ஒண்ணாது.........யந்திரம் போல்
      ஆழ்மனத்தே நீயுமிழ்ந்த அதர பானம்
      ஆற்றுப்படுத்துமென ஆறி நிற்பேன்.
  •  

No comments:

Post a Comment