காற்றடிக்கிறதே......
மழையடிக்கிறதே.....
காவலென்னும்......
முள்வேலியிலே......நம்
கதை முடிகிறதே......
உயிர்கனவழிகிறதே.
(காற்றடிக்கிறதே)
நீள்வயலின்......நேர்கோடுகளில்.....
நெடும்பாதை நடை நடந்தோம்....
ஆழ்கடலின்.....அலை மேடுகளில்......
அனுதாபத் திரை கடந்தோம்......
குயிலிழந்த பாடல்களாய்
கோலிழந்த குருடர்களாய்
மயிலிழந்த ஆடல்களாய்
மயங்குகின்ற வாழ்வினிலே.....
(காற்றடிக்கிறதே)
நாம்பிறந்து தவழ்ந்த நிலம்....
நாம் நடந்து கடந்த புலம்.....
சாம்பல் பூத்த மேடானது.....
ஆம்பல்களும் நாணல்களும்
ஆள் மயக்கும் மல்லிகையும்
நாட்குறிப்பில் ஏடானது.......
தோள்கொடுத்தோம்......
துயர் தீருமென்றே.....
தொடுவானை தொட முயன்றோம்....
வாழ்வினிலும்......
சிறு தாழ்வினிலும்......
வருநாளை நினைத்திருந்தோம்.......
குயிலிழந்த பாடல்களாய்
கோலிழந்த குருடர்களாய்
மயிலிழந்த ஆடல்களாய்
மயங்குகின்ற வாழ்வினிலே.....
(காற்றடிக்கிறதே)
ஆனந்தபிரசாத்.