Wednesday, July 4, 2012

தாவரங்களுடன் பேசுதல்



ஒன்றும் அறியாத...நீ ஒருகால் சொர்க்கத்தின்

மன்று திறக்க மகிழ்வையேல் ... நன்று! நம்

வர்க்கத்தின் அலைநீள

விம்பத்தில் வாழ்வியலின்

நர்த்தனங்கள் அறிவாய் நன்கு! ...... அர்த்தங்கள்

ஆயிரமாய் புஷ்டிக்கும்!

அறிந்தோம்ப யாவருளர்?

வாயிருந்தும் வீணாகும் வாழ்வு ....... பேயிருந்து

அரசாளும் பூமியிலே ஆதரவு...நி ராதரவென்

றுரை சாலச் சொல்ல உறுமோ? .....கரைசேரும்

கலங்களுக்கு கூடவொரு

கடற்பறவை கூட்டுண்டு

அலங்கோலம் ஆனதெம தாழி! ..... நிலக்காதல்

கிழமாகிப் புளித்ததுஎம்

கீர்த்திகளும் நேர்த்திகளும்

நழுவிப்போய் விட்டதொரு நாணம் .... பழகிப்போய்

பால்புளிக்கும்....சீச்சீ...இப்

பழம்புளிக்கும்! காலவகை

யால் இளிக்கும் கருத்துகளில் ஆழ்வோம் ..... ஞாலமிசை

உளுத்தஉமல் கொட்டையென....

உறுமவொண்ணா சிங்கமென....

வெளுத்துக் கட்டுமொரு வாழ்வு ...... கொளுத்தும்

வெயில்...பனியின்குளிரில் வெவ்வேறு சீதோஷ்ண

வயலில் விளைகின்ற வாய்ப்பின் ........ நியமம்

தர்க்கத்திற் கப்பால் தாண்டியது! உறவே..நீ....

சொர்க்கத்தில் இருந்து சுகி!
ஆனந்தபிரசாத்.
பின்குறிப்பு:
அர்த்தமில்லா யுத்தங்களின்
அனர்த்தங்கள் ஆட்கொண்ட
சத்தமில்லா ஜீவனுக்கு
சமர்ப்பணம் இந்த வரிகள்.

· · · Share · Delete

  • 1 share1 share

    • Vj Yogesh ‎//ஒன்றும் அறியாத...நீ ஒருகால் சொர்க்கத்தின்

      மன்று திறக்க மகிழ்வையேல் ... நன்று! // .......//உளுத்தஉமல் கொட்டையென....

      உறுமவொண்ணா சிங்கமென....

      வெளுத்துக் கட்டுமொரு வாழ்வு // அருமை அண்ணா!

      June 24 at 9:39pm · · 2

    • Thiru Thirukkumaran கரைசேரும்
      கலங்களுக்கு கூடவொரு
      கடற்பறவை கூட்டுண்டு
      அலங்கோலம் ஆனதெம தாழி!//

      June 25 at 6:31am · · 2

    • Thiru Thirukkumaran நியமம்
      தர்க்கத்திற் கப்பால் தாண்டியது//

      June 25 at 6:31am · · 1

    • கிரி ஷாந் பால்புளிக்கும்....சீச்சீ...இப்

      பழம்புளிக்கும்! காலவகை

      யால் இளிக்கும் கருத்துகளில் ஆழ்வோம்

      June 25 at 9:24am · · 1

    • Pena Manoharan வெண்பா,குறும்பா,நறுக்குகள் என்று நீளும் தமிழ்மரபின் தற்கால புறநானூற்றின் புறப்பாட்டாய்ப் புலப்படுகிறது பூரிப்படைகிறது மனம்.வாழ்த்துக்கள் ஆனந்த் பிரசாத்.
      June 25 at 10:39am · · 1

    • Francesca Kanapathy ‎"வர்க்கத்தின் அலைநீள

      விம்பத்தில் வாழ்வியலின்

      நர்த்தனங்கள் அறிவாய் நன்கு"…..very nice, uncle!!!

      June 26 at 9:58pm · · 1

    • Pa Sujanthan ஞாலமிசை

      உளுத்தஉமல் கொட்டையென....

      உறுமவொண்ணா சிங்கமென....

      வெளுத்துக் கட்டுமொரு வாழ்வு .

      June 27 at 12:36pm · · 1

    • Varsha Ram உளுத்தஉமல் கொட்டையென....
      உறுமவொண்ணா சிங்கமென....
      வெளுத்துக் கட்டுமொரு வாழ்வு ... அருமை

      Sunday at 4:49am · · 1

    • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ‎"..அர்த்தமில்லா யுத்தங்களின்
      அனர்த்தங்கள் ஆட்கொண்ட
      சத்தமில்லா ஜீவன.." அருமை.

      Monday at 1:28pm · · 1

    • Anand Prasad இந்த சிறு மழலைகளின்
      இருப்பழிந்த நிலை....எண்ணி
      நொந்து...கருத்துப்பகிர்ந்த
      நுமக்கென்றன் நன்றிகள்!

      Monday at 8:27pm · · 1


No comments:

Post a Comment