உருண்டு கொண்டிருந்த
சக்கரத்துப் பல்லிடுக்கில்
மாட்டிக்கொண்டான்!!!
உரத்த சத்தமாய்
உருண்டவைகள் இப்போது
இரத்தக் கொழுப்பில்
இதமாகச்சுழல்கிறது
சக்கரத்துப் பல்லாகி
சமாளிக்கத் தெரியாது
வக்கரித்துப் போனாலும்
வாழ்வைப் புரியாத
மக்கு......!!! தவறிப்போய்
மாட்டிக்கொண்டு விட்டான்.
இல்லாத ஞானத்தை
இருட்டு விளக்கோடு
எல்லா உலகும் போய்
எழுகடலும் தாண்டிப்போய்
தேட வெளிக்கிட்டு
திசையேதும் தெரியாமல்
காடேது.......? நல்ல
கழனியெதென்றறியாமல்
கறுத்த திரையில்
கரும்புள்ளி போட்டுவிட்டு
காணவில்லை....என்று
கனகாலம் தேடியவன்......
சக்கரங்களுக்கிடையே
சரியாக மாட்டிவிட்டான்
அவன் கொண்ட நம்பிக்கை
அவனுக்குள் சங்கீதம்
சவமாகிப் போனாலும்
சக்கரங்கள் நிற்பதில்லை
கூரியதோர் பல்லாகிப்
பொருந்திப்போய் வாழ்வான
பாரிய சுழற்சியிலே
பண்பட்டு அனுபவத்தின்
வெளிச்சத்தைக் கொண்டு
தேடினால் கிடைக்காதோ தெளிவு....?
அதுசரி...
உணர்ச்சியே இல்லாமல்
உருள்வதற்குப் பேர்தானா
வாழ்க்கைச்சக்கரம்?
- 3 shares3 shares
Melinchi Muthan மக்கு, சோம்பேறி,ஞானி,கலைஞர் என்ற உணர்வு விகிதங்களில் ஆடி வாழ்க்கையின் அபத்தத்தை வாழ்க்கை மீதே எழுதிச் செல்வோம். எழுதுதலும் அபத்தத்தின் தூர இருக்கும் மாற்றுருதான்.
July 13 at 10:13pm · · 2
கிரி ஷாந்
இல்லாத ஞானத்தை
இருட்டு விளக்கோடு
எல்லா உலகும் போய்
...
எழுகடலும் தாண்டிப்போய்
தேட வெளிக்கிட்டு
திசையேதும் தெரியாமல்
காடேது.See More
July 15 at 12:48am · · 1
Pena Manoharan "உருள்வதும் உருட்டப்படுவதும்தான் உண்மையில் வாழ்க்கையாகிப் போனது கருப்பைமுதல்"என்பது என்கவிதையொன்றின் ஆரம்பவரிகள்.உங்களது உணர்வுபூர்வமாக உரத்துப்பேசுகிறது.வாழ்த்துக்கள்.
July 15 at 7:24am · · 1
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "தேட வெளிக்கிட்டு
திசையேதும் தெரியாமல்
காடேது.......? நல்ல
கழனியெதென்றறியாமல்.." அருமை
July 15 at 12:37pm · · 1
Pa Sujanthan
அவன் கொண்ட நம்பிக்கை
அவனுக்குள் சங்கீதம்
சவமாகிப் போனாலும்
சக்கரங்கள் நிற்பதில்லை
கூரியதோர் பல்லாகிப்
... பொருந்திப்போய் வாழ்வான
பாரிய சுழற்சியிலே
பண்பட்டு அனுபவத்தின்
வெளிச்சத்தைக் கொண்டு
தேடினால் கிடைக்காதோ தெளிவு....?See More
July 15 at 1:18pm · · 1
Arasan Eliyathamby .உணர்ச்சியே இல்லாமல்
உருள்வதற்குப் பேர்தானா
வாழ்க்கைச்சக்கரம்? இந்த கவிதை எதற்காக கேள்வியுடன் முடிகிறது ? கவிதை சொன்னது போல ஒரு தமிழர் மீன் அரைக்கும் இயந்திரத்துள் பாய்ந்த்கு தற்கொலை செய்துகொண்டார் நோர்வேயில பல ஆண்டுகளின் முன் !
.
கரும்புள்ளி போட்டுவிட்டு
காணவில்லை....என்று
...
கனகாலம் தேடியவன்......
சக்கரங்களுக்கிடையே
சரியாக மாட்டிவிட்டான்"See More