Friday, June 22, 2012

3123வது நண்பனைத்தேடல்!


எனக்குக் கொஞ்சம்
கற்றுக் கொடுங்கள்!
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
காய்களை நகர்த்துவதற்கு
எதிரிக்கு எதிரி
எனக்கு நண்பனென்று
விதியாகிப் போனதன்
விஞ்ஞான விளக்கத்தை......
முரண்பாடுகள் தோன்றின்
முறிந்துபோகும் அன்பின்
சமன்பாடுகள் பற்றி
சரியான துலக்கத்தை......
நேத்திரங்களின் வீச்சில்
நெகிழ்ந்துபோகும் அன்பின்
சூத்திரத்தை உணர்ந்துகொண்டு
சுகலயத்தில் திளைக்கின்ற
மாத்திரத்தில் எல்லாமே
மாறிப்போய் வெறுப்பாகி
ஆத்திரத்தைப் பிரசவிக்கும்
அதிசயத்தின் அர்த்தத்தை!!!
கண்ட முதல் நிமிடம்
கனகாலம் பிரிந்தவர்போல்
எண்ணவைக்கும் நட்பில்
ஏற்படுமோர் சந்தோஷம்!!!
பாதங்களுக்கிதமான
பழையதொரு சப்பாத்தின்
ஆதரவைப்போல் மனதை
ஆட்படுத்தும் அன்பதனை....
காரியம்........ ஆகும்
கடைசிக் கணம் வரையில்
வீரியம் ஒழுகாதிருக்கும்
வித்தைச் சினேகித்தை......
சுயலாபத்தூணில்
முதுகு சொறிந்துகொள்ளும்
நியமத்தில் வாழும்
நிழல் வளைந்த மனிதர்களின்
தோழமை என்னும்
தொல்லைகளே இல்லாத
நாளைய நண்பனை
இனங்கண்டு கொள்ளுவதை.......
எனக்குக் கொஞ்சம்
கற்றுக் கொடுங்கள்!!!
ஆனந்தபிரசாத்.


https://groups.google.com/forum/?fromgroups#!topic/soc.culture.tamil/5wId28e7xk8
Friendship..... It is a peculiar relationship
Geetha Ramaswami Post reply 11/2/94

3123Avathu n^a_Npa_naith thE_tal
e_nakkuk konysam teach me kaRRuk ko_tuNGkaL please!! vAzhkkais sathuraNGkaththi_n to move the pieceskA_ykaLai n^akarththuvathaRku in life's game of chessethirikku ethiri how scientific elucidation e_nakku n^a_Npa_ne_nRu explains the rulevithi_yAkip pO_natha_n that my foe's foevinynyA_na viLakkaththai is my friend
mura_NpA_tukaL thO_nRi_n how to explain correctlymuRin^thupOkum n^a_tpi_n the rules of friendshipsama_npA_tukaL paRRi which fragmentssari_yA_na viLakkaththai if differences occur
n^EththiraNGkaLi_n vIssil love which blossoms n^ekizhn^thupOkum a_npi_n at the swiftness of sightsUththiraththai u_Narn^thuko_N_tu while enjoying the pleasuresukala_yaththil thiLaikki_nRa of understanding such lovemAththiraththil ellAmE how everything in a momentmARippO_y veRuppAki changes to hatredAththiraththaip pirasavikkum to explain this surprise athisa_yaththi_n arththaththai born of impatience
ka_N_tamuthal n^imi_tam happiness from friendshipka_nakAlam pirin^thavarpOl whick makes one feele_N_Navaikkum n^a_tpil at the first sightERpowmOr san^thOsam as if not seen for yearspAthaNGkaLuk kithamA_na love which mesmerisespazhai_yathoru sappAththi_n one's mind like theAtharavaippOl ma_naththai comfort of an old shoeA_tpa_tuththum a_npatha_nai for the feet;
kAri_yamAkum the mystery of friendship ka_taisik ka_Namvarai_yil which never reveals its naturevIri_yamozhukAthirukkum till the last minutevin^thais si_nEkithaththai of its accomplishment
su_yalApath thU_Nilmuthuku soRin^thukoLLumn^i_yamaththil vAzhumn^izhal vaLain^tha ma_nitharkaLaithOzhamai e_n_num to recognise the thollaikaLE illAtha tomorrow's friendn^ALai_ya n^a_Npa_nai without thei_naNGkka_N_tu koLvathai nuisance of friendship
e_nakkuk konysam teach mekaRRuk ko_tuNGkaL please!
a modest attempt at trans. I tried this long time ago and then never had time to really finish it. Pleasefeel free to correct/comment.

  • 1 share1 share
    • Arasan Eliyathamby
      தோழமை என்னும்

      தொல்லைகளே இல்லாத

      நாளைய நண்பனை
      ...
      இனங்கண்டு கொள்ளுவதை.......

      எனக்குக் கொஞ்சம்

      கற்றுக் கொடுங்கள்!!!
      wow supper !
      See More
      June 13 at 5:22am · · 1
    • Thiru Thirukkumaran
      சுயலாபத்தூணில்
      முதுகு சொறிந்துகொள்ளும்
      நியமத்தில் வாழும்
      நிழல் வளைந்த மனிதர்களின்
      தோழமை என்னும்
      ... தொல்லைகளே இல்லாத
      நாளைய நண்பனை
      இனங்கண்டு கொள்ளுவதை// நட்பும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும் :) அகவல் ஓசை கலந்த கவிதையை வாசிக்கின்ற இன்பம் அலாதியானது தான்.
      See More
      June 13 at 7:04am · · 1
    • Vj Yogesh ‎"காரியம்........ ஆகும்

      கடைசிக் கணம் வரையில்

      வீரியம் ஒழுகாதிருக்கும்

      வித்தைச் சினேகித்தை......" யதார்த்தம் அண்ணா! உங்களிடமிருந்து இப்படி வித்தியாசமான கவிதைகளையும் எதிர்பார்க்கிறேன்!!
      June 13 at 11:29am · · 1
    • Kannathasan Krishnamoorthy உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களைவது அக்கால நட்பு
      இடுக்கண்ணில் உள்ளவனிடம் உடுக்கையை பிடுங்குவது
      இக்கால நடப்பு...
      June 14 at 8:07am · · 1
    • Sriranjani Vijenthira நாம் எல்லோரும் ஒரு நல்ல நண்பரைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்றால், அது இன்னொரு வகையில் நாமும் நல்ல நண்பர்களாக இல்லை என்பதைச் சொல்கிறது இல்லையா? என்வே முதலில் நாம் ஒரு ந்ல்ல நண்பராக இருக்க முயற்சிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்..
      June 14 at 9:04am · · 1
    • Arasan Eliyathamby எங்களுடைய உற்ற நண்பனை நாங்கள் கண்ணாடியில் எங்களையே பார்க்கும் போது தெரியும் எண்டு சொல்கிறார்கள் உண்மையா ?
      June 14 at 9:26am · · 1
    • Anand Prasad
      Sriranjani Vijenthira
      ஒரு நல்ல நட்புக்கு வரைவிலக்கணம்
      சொல்வீர்களா சகோதரி?
      "பாதங்களுக்கிதமான
      பழையதொரு சப்பாத்தின்
      ... ஆதரவைப்போல் மனதை
      ஆட்படுத்தும் அன்பதனை...."

      இதுதான் இருபேருக்குமான
      எனது வரைவிலக்கணம்!!!
      See More
      June 14 at 10:42pm · · 3
    • Sriranjani Vijenthira முரண்பாடுகளுக்காக முறியாத, துவண்டு போகும் போது மனதுக்கு ஆறுதல் தரக் கூடிய அன்பாக இருந்தால் போதும்.
      June 14 at 10:52pm · · 2
    • Anand Prasad That make sense Sriranjani Vijenthira
      June 14 at 10:56pm ·
    • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ‎'..முதுகு சொறிந்துகொள்ளும்
      நியமத்தில் வாழும்
      நிழல் வளைந்த மனிதர்களின்
      தோழமை என்னும்
      தொல்லைகளே இல்லாத.." அருமை. அது ஒரு கனவுலக்காவே இருக்க முடியும் போலிருக்கிறது இந்தப் போலி உலகில்..
      June 17 at 12:32pm · · 1
  •  

Tuesday, June 5, 2012

என் முற்றத்தின் இறுதி முத்தம்.



நான் உன்னில்......நீ என்னுள்.....
உமிழ்ந்த அன்பின்
நறுநீர் உறைந்திருக்கும்!!! என்ப தாகத்
தானிந்த நாள்வரையில் தாங்கி வந்தேன்
தறுவாய்கள் தவறாகித் தளர்ந்த போதில்
வானின்றிழிந்த எரி சரங்க ளாலென்
வாழ்வுருகிப் போனதென விருத்தம் பாட
ஏனிங்கு விண்முகடும் எரிந்த நீயும்
இயலாமை சொல்லியெனை ஏங்க வைத்தாய்?
ஓசையில்லா என்மனதைச் சொல்ல வென்றென்
ஓசைகளை வேண்டியொரு யாகம் செய்தேன்
யாசித்தேன்....பாஷைகளை.......திறந்து போடு!
யாருடனும் பேசவொரு ஏது வாகும்
வாசிப்பிற் குழலாகும்.....வளைந்து போகும்
வசிப்பிற்கும் வலியதொரு வழிய தாகும்
நேசிப்பில் நீர்சுரக்கும்....நேத்திரங்கள்
நின்றுநெடு நாள்கடக்கும்......நீடு வாழும்!
சூழ்நிலையின் சூக்க்ஷூமத்தால் நானோர் கைதி
சுந்தரங்கள்....சுதந்திரங்கள் சிதைந்த போதும்
வாழ்முனைப்பு வேறுவழி யின்றி ஏகும்
வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்!!!
காழ்ப்புமனப் படுதாவில் கவிதை தீட்ட
யாப்புமனம் ஒண்ணாது.........யந்திரம் போல்
ஆழ்மனத்தே நீயுமிழ்ந்த அதர பானம்
ஆற்றுப்படுத்துமென ஆறி நிற்பேன்.
ஆனந்தபிரசாத்.


  • 3 shares3 shares
    • Sriranjani Vijenthira சோகமும் காதலும் ---- நன்றாக இருக்கிறது
      May 26 at 10:48pm · · 1
    • Vj Yogesh ‎"ஓசையில்லா என்மனதைச் சொல்ல வென்றென்

      ஓசைகளை வேண்டியொரு யாகம் செய்தேன்

      யாசித்தேன்....பாஷைகளை.......திறந்து போடு!" ......................." நேசிப்பில் நீர்சுரக்கும்....நேத்திரங்கள்

      நின்றுநெடு நாள்கடக்கும்......நீடு வாழும்! இவ் வரிகளில் வழுக்கி வீழ்ந்தேன் bro!!
      May 26 at 11:19pm · · 1
    • Cheran Rudhramoorthy பிரசாத், "சுந்தரங்கள்....சுதந்திரங்கள் சிதைந்த போதும்" என முடிக்க வேண்டாம்:இதோ மீதி:
      May 27 at 12:30am · · 2
    • Cheran Rudhramoorthy சுந்தரங்கள் சுதந்திரங்கள் சிதைந்த போதும்
      தந்திரங்கள் எப்போதும் கவிஞர்க்குண்டு! அந்தரத்தில் ஆடுவது காதல் அல்ல; ஓசையிலும் காமம் உண்டு ;உனக்கும் உண்டு!வெந்தழியும் உடம்பென்பார் அவர்;நான் ஒப்பேன்;வேறுவகைக் காமம் உண்டு; வேறும் உண்டு!!!!
      May 27 at 12:39am · · 4
    • அந்தரத்தில் ஆடுவது காதல் ..............................
      May 27 at 1:22am ·
    • Thiru Thirukkumaran நேசிப்பில் நீர்சுரக்கும் நேத்திரங்கள்
      நின்றுநெடு நாள்கடக்கும் நீடு வாழும்!// வாழும்..
      May 27 at 4:40am · · 1
    • Amalraj Francis அருமை
      May 27 at 11:15am · · 1
    • Abdul Nazeer · Friends with Memon Kavi and 2 others
      I really enjoyed reading this poem. Lovely!
      May 27 at 11:46am · · 1
    • Kannathasan Krishnamoorthy ‎'சுதந்திரங்கள் சிதைந்த போதும்
      வாழ்முனைப்பு வேறுவழி யின்றி ஏகும்
      வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்'அருமை
      May 27 at 7:54pm · · 2
    • Anand Prasad Cheran Rudhramoorthyகற்றார்க்குக் கற்றாரில் காமம் உண்டென்
      கால் தழைத்த மண்ணில் மிகக்காமமுண்டு
      மற்றாங்கே மீளவொரு காமமுண்டு.....
      மறைந்தால் என் மண்தழுவும் காமமுண்டு.
      நன்றி சேரன்.
      May 27 at 10:22pm · · 5
    • Emiliyanus Judes அன்பின்

      நறுநீர் உறைந்திருக்கும்
      May 29 at 2:34am · · 1
    • ஏன் இப்படி கண்ட இடத்தில் வாயை வைப்பானேன். அப்புறம் புண்ணாய்ப் போச்சுன்னு புலம்புவானேன்.
      May 29 at 4:58am ·
    • ஏம்பா இப்படி வடிவேலு ரேஞ்சுக்கு உள்ளே வந்து தொந்திரவு பண்ணுகிறாய் என்று திட்டாதீங்க.
      May 29 at 5:00am ·
    • பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
      வாலெயிறு ஊறிய நீர்.
      May 29 at 8:05pm ·
    • Anand Prasad Ashokha Thegreateதங்கள் உலகம் தழுவிய தமிழறிவுக்கும்.......
      இலக்கியம் சார்ந்த புரிந்துணர்விற்கும்......
      வடிவேலை மிஞ்சிய கடிவேலனாக நீங்கள்
      பரிணமித்ததற்கும் எந்தன் முடிதாழ்த்தி வணங்குகிறேன்!!!
      அறிவில் ஆதவன் நீங்கள்.
      அயல்வளவு மேய்ந்து
      குறிப்பெழுதிப் போன குரு!!!
      May 29 at 9:26pm · · 1
    • என்வளவுச் சூரியஒளி, அயல்வளவுச் சூரியஒளி என்றில்லை நண்ப, குறளும் யார் வளவிற்குரியதுமல்ல. தங்கள் கவிதையில் தொக்கிநிற்கும் சமூக அக்கறையையும் கண்டிருந்தேன். பாராட்டவே குறள் பதிந்தேன்.
      May 29 at 9:36pm · · 1
    • Anand Prasad என் மனவுணர்வின் வெளிப்பாடான இவ்வரிகளை
      வரித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
      உங்கள் மனவீணையில் ஒருஸ்வரமாவது அதிருமேல்
      தங்கும் மனத்தின் தவம்.
      May 29 at 10:04pm · · 1
    • உங்கள் மொழியாளுமை மகிழ்விக்கிறது. உணர்வுகளை காட்சி செய்யும் வல்லமை பாராட்டுக்குறியது.
      Yesterday at 12:37am via mobile · · 1
    • Pa Sujanthan வண்ணமென விழித்திரைக்குள் மாயம் ஆகும்!!!
      காழ்ப்புமனப் படுதாவில் கவிதை தீட்ட
      யாப்புமனம் ஒண்ணாது.........யந்திரம் போல்
      ஆழ்மனத்தே நீயுமிழ்ந்த அதர பானம்
      ஆற்றுப்படுத்துமென ஆறி நிற்பேன்.
  •