''சுதந்திர வாசம்'
'பழைய வீதி.
தொலை(ந்த) தேசம்.
00.00.0000
நண்பனுக்கு,
'பிரிய' என்று நீ விளித்திருந்தாய்......!
இருபத்தைந்து வருடங்களின்
பிரிந்தென்ன....விட்டென்ன.....
பிரியங்களுக்கே
பிரியமில்லாது போய்விட்ட
சீவிய விசித்திரங்களின் பிறகு?
நானும் வாழ்கிறேன்
நீயும் அதுபோலவே....
பிறகுநலத்தை அவாவி
என்ன கிழியப்போகிறது?
இங்குஎல்லாம் வழமையேபோல்....
ஓசை
பேரோசை
அலறல்
வீரிட்டலறல்....
பாக்கு வெட்டிக்கும்
சீவல் பாக்கிற்கும்
நடுக்கூறிலுள்ள
திரிசங்கு சொர்க்கம்!
ஆண்டுக்கு விசேஷங்கள்
வருகிறதோ இல்லையோ
ஆண்டுத்திவசங்கள்
ஆயிரம்....ஆயிரம்.
கடைசித்துளிக் கண்ணீரை
சேமித்துக் கொள்ள வேண்டி
மெளனம்...மெளனம்....மெளனம்!
விழிநீர் ஊறுமா ஊறாதா
என்பதுஎனது பிரச்சனை
உன்னுடையது
'கியூபெக்' தேறுமா நாறுமா
என்பதாக எழுதியிருந்தாய்
அங்கும் உனக்கும்
நில நடுக்கம் என்றறிந்து
மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நள்ளிரவில் வேலை முடித்து
'மெத்ரோ' என்ற ஒன்றில்
திரும்பி வரும்போது
யாரோ ஒரு தோற்தலையன்
இருபத்தைந்து சதம் யாசிக்க
நீ.........யோசிக்க .....
உன்மேலுதடு வெடித்துப்போனதாக
எழுதியிருந்தை நான் வாசிக்க...
பேரானந்தக்கடலில்
அமிழ்ந்துபோய் விட்டேன்!
இருப்பினும்....
அன்னை வளர்ப்பின் நாகரீகம் கருதி.......
''நண்பா, இப்போதுநலமா.....
புண் ஆறிற்றா?''
இங்கேதான்ன பிச்சை
இருட்டியென்று பார்த்தால்
அங்கேயும் அதே கதைதான்
அலைகடலைத் தாண்டியென்ன?
நான்எனது தேசத்திலும்
நீ பரதேசத்திலும்
அனாமதேயங்கள் தான்!
நீ எப்போதும்
(நான் எப்போதாகிலும்)
பருக்கைக்காக மட்டுமே
வாய்திறப்பதையும் அறிந்தேன்
இருப்புக்காகத் திறந்தவனோ
இங்கேயும் அங்கேயும்.....
யாரும் இன்னமும்
உரிமை கோரவில்லையாம்!
சனநடமாட்டமிக்க
நட்ட நடுத்தெருவில்
வயிற்றெரிச்சலில்
மலம் கழித்துவிட்டுப்போனதற்கு
எந்த நாய் தனது
கழிப்பிற்காக
கழிவிரக்கப்பட்டிருக்கிறது?
இங்கேயும் எரிந்தது
அங்கேயும் எரிகிறது
தீ.... ஒன்று விலாசம் வேறு
முகவரி இல்லாதவர்களினால்
மூண்ட தீ பற்றியெழுதினாய்
படித்தேன் தித்தீப்பாகவிருந்தது.
நாங்கள் வழமையேபோல்
ஒத்த கருத்துள்ளவர்களிடம்
ஆக்ரோஷமாக கத்தியும்
ஒத்தோடிக்கொண்டிருப்பவரிடம்
ஒத்தூதிச்சுத்தியும்
இருப்பை நிலை நிறுத்துவோம்!
சொறிந்து கொடுத்துக்கொண்டும்
சொறிய விட்டுக்கொண்டும்
சுகத்தில் லயிப்போம்.
எனது கடிதம்
உனக்குகுரூரமாகப் படுமாகில்.......
இன்னமும் நீ கொஞ்சம்
மனிதனாகத்தானிருக்கிறாய்!
இந்தக்கடிதத்தை
இருட்டிலிருந்தே எழுதுகிறேன்
ஓநாயைவிட என் கண்கள்
இருளில் துல்லியமாய்
எதையும் பார்க்கும்...
கூர்ப்பில்
மனிதப்பிராணியாகிவிட்டேன்
கடிதம் நீண்டுவிட்டது
கிடைத்தால்.....எழுது
கிடைத்தால் எழுதுகிறேன்.
இப்படிக்கு..........
பி.கு;
நீ அங்கு கட்டப்பொம்மு வேடம்கட்டி
வசனங்கள் விசிறுவதாக எழுதியிருந்தாய்
திறம்பட நடி!
வாழ்த்துகள்.
இங்கு நான் தூக்கில் தொங்க அது உதவும்.
{1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து
எனது பால்ய நண்பனின் கடிதம்.....
Tsunami யின் எச்சசொச்சங்களாய்நேற்று எனை எட்டியது.}
Pena Manoharan நல்ல பதிவு ஆனந்த்.வாழ்த்துக்கள்.2004 ஆழிப்பேரலையின் போது என்னுடைய கவிதையொன்றில் "சூர சம்ஹாரத்தின் சூத்திரம் தெரியும்-இந்த ஈர சம்ஹாரத்தின் இதிகாசம் என்ன" என்று எழுதியதும் ஞாபகத்தில் இழைகிறது.
ReplyDeleteMarch 13 at 11:44pm · Like · 1.
Nadchathran Chev-Inthiyan First photo, German or Russian?
March 14 at 5:49am · Unlike · 1.
Vj Yogesh Very nice Sir! It's really heart touching....
March 14 at 10:21am · Unlike · 1.
Mary Beulah Brilliancy ullathin aazhathil irunthu varubhavai...
March 14 at 10:31am · Unlike · 1.
Anand Prasad Nadchathran Chev-InthiyanWar knows!
March 14 at 8:00pm · Like · 1.
Melinchi Muthan நானொரு நல்ல நண்பனா என்ற கேள்வி இப்போதெல்லாம் எனக்குள் இருக்கிறது.அந்தக் கேள்வியைக் கடந்து வந்து வாசிக்கும் மனோ நிலையை நான் இன்னமும் பெறவில்லை.அதை என் சுய விசாரணையிலிருந்தே பெறவேண்டும்.நம் சூழலில் 'நண்பர்' என்பதே நாம் ஒருவர்மீது கட்டும் கருத்தாக இருக்கிறது போன்றும் தோன்றுகிறது.அடிக்கடி அன்னாகரீனினா நாவலில் வரும் லெவின் சொன்ன வார்த்தைகளையே நினைத்துப் பார்க்கின்றேன்; 'அன்பு பகுத்தறிவுக்கு முரணானது'.......இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த்தக் கடிதம் வாசித்து முடிவில் மனசோரம் துயரமே எஞ்சிநிற்கிறது.
March 14 at 10:12pm · Unlike · 2.
மீராபாரதி பிரக்ஞை 'அன்பு பகுத்தறிவுக்கு முரணானது'.... அல்ல...அப்பாற்பட்டது ...
March 15 at 7:51pm · Unlike · 1.
Anand Prasad Melinchi Muthanஉங்களைப்பற்றி நண்பர் செல்வம் நிறையச்சொல்லியிருக்கிறார்.
நான் உங்கள் எழுத்துக்களை அறவே படித்ததில்லை.
ஆனால் தேடகம் ஒன்றுகூடலில் .001 கணம் நேரில்
கண்டு கைகுலுக்கிவிட்டோடிவிட்டேன். நட்பு...என்ற
பதத்தில் எனக்கும் நிறையவே விசாரணையுண்டு தங்களைப்போல்! புரிந்து கொள்வதிலிருந்து
ஆரம்பிக்கிறதென்று நினைக்கிறேன்.
March 15 at 8:08pm · Like · 1.
Emiliyanus Judes மெளனம்...மெளனம்....மெளனம்!
March 16 at 3:55am · Unlike · 1.
Spartacusthasan Thasan · 51 mutual friends
""சொறிந்து கொடுத்துக்கொண்டும்
சொறிய விட்டுக்கொண்டும்
சுகத்தில் லயிப்போம்.""
Saturday at 7:49am · Unlike · 1.
Spartacusthasan Thasan · 51 mutual friends
நாங்கள் வழமையேபோல்
ஒத்த கருத்துள்ளவர்களிடம்
ஆக்ரோஷமாக கத்தியும்
ஒத்தோடிக்கொண்டிருப்பவரிடம்
ஒத்தூதிச்சுத்தியும்
இருப்பை நிலை நிறுத்துவோம்!
Saturday at 7:53am · Unlike · 1.
Spartacusthasan Thasan · 51 mutual friends
''நீ அங்கு கட்டப்பொம்மு வேடம்கட்டி
வசனங்கள் விசிறுவதாக எழுதியிருந்தாய்
திறம்பட நடி!
வாழ்த்துகள்.
இங்கு நான் தூக்கில் தொங்க அது உதவும்.""/???????? இதன் புரிதல் என்ன?நான் புரிந்தது போலவா நீங்களும் புரிந்து உள்ளீர்கள்????
Saturday at 7:54am · Unlike · 2.
Jegatheesan Subramaniam 90 ம் ஆண்டு எழுதப்பட கடிதம்.
இன்னமும் 90 ஆண்டுகளுக்கு பின்பும் வாசிக்கப்படக் கூடிய கடிதம்.
தொலைந்த தேசத்தின் கடிதம்.
தொலை தேசத்துக்கான கடிதம்.
வாசிப்பதற்காவே வாழவைக்கும் கடிதம்.
நன்றி,பிரசாத்.
Saturday at 12:05pm · Unlike · 1.
Anand Prasad Spartacusthasan Thasan ஆம்!!!
Saturday at 9:02pm · Like.