Sunday, November 27, 2011

உலகம் தழுவிய ஒட்பம்.





















என்றோ...எப்போதோ
ஏதோவொரு பறவையின்
எச்சத்தால் பாறையின்மேல்
உயிர்த்துப்படர்ந்து ....அகன்ற
கொடிநாம்!!! உயிர் வேர்கள்
குன்றின் நீர் குடித்து
குளிர்ந்தனவா?  அல்லவெனில்
எம் தண்மை கல்லுக்குள்
ஈரம் நுழைத்ததுவா?


பசியநிறப்பாறைகளை
பசியாற வைத்தவர் நாம்!
கசியும் எமதுதிரத்தால்
பூகோளம் சிவந்தது காண்!!!


எச்சத்தின் வழிவந்த
எச்சங்கள்.........இன்றுலகின்
மிச்சத்தை உண்ணுகிற
மிலேச்சர்க்காய்ப் போராடும்.


பாறைவழி வந்தவர் நாம்
பசி...தாகம்...தாங்கவென
நூறுவழி உண்டு! .....நுண்
உருக்கொள்ள........வேரறுந்து
நாறினும் நாம் உய்வோம்
நாளை உலகுய்யவென.


கணத்துள் முகம்.....நூறு
காட்டும் வியாபாரம்.....எம்
நிணத்துள் புழுவாய்நுழைய
நினைத்தாலும்.....அனுமதியோம்!

1 comment:

  1. Iyyappa Madhavan பாறைவழி வந்தவர் நாம்
    பசி...தாகம்...தாங்கவென
    நூறுவழி உண்டு! ..
    November 27, 2011 at 10:21pm · Unlike · 2.



    Emiliyanus Judes ஏதோவொரு பறவையின்

    எச்சத்தால்

    பாறையின்மேல்

    உயிர்த்துப்படர்ந்து ....அகன்ற

    கொடிநாம்!!!
    November 28, 2011 at 2:25am · Unlike · 1.



    P A Jayakaran Arullingam சகோதரம்!
    நன்றி.

    எச்சத்தின் வழிவந்த
    எச்சங்கள்........இன்றுலகின​்
    மிச்சத்தை உண்ணுகிற
    மிலேச்சர்க்காய்ப் போராடும்.
    November 28, 2011 at 9:14am · Unlike · 1.




    Thiru Thirukkumaran · 69 mutual friends
    பாறைவழி வந்தவர் நாம்

    பசி...தாகம்...தாங்கவென

    நூறுவழி உண்டு! .....நுண்

    உருக்கொள்ள........

    வேரறுந்து

    நாறினும் நாம் உய்வோம்//
    November 29, 2011 at 10:14am · Unlike · 1.



    Pa Sujanthan ∙∙எச்சத்தின் வழிவந்த∙∙∙∙எச்சங்கள்......​..∙∙∙∙இன்றுலகின்∙∙∙∙மிச்சத​்தை உண்ணுகிற∙∙∙∙மிலேச்சர்க்காய​்ப் போராடும்.∙∙∙∙ ∙∙∙∙பாறைவழி வந்தவர் நாம்∙∙∙∙பசி...தாகம்...தாங்​கவென∙∙∙∙நூறுவழி உண்டு! .....நுண்∙∙∙∙உருக்கொள்ள...​.....∙∙∙∙வேரறுந்து∙∙∙∙நாறி​னும் நாம் உய்வோம்∙∙∙∙நாளை உலகுய்யவென.∙∙∙∙ ∙∙∙∙கணத்துள் முகம்.....நூறு∙∙∙∙காட்டும்​ வியாபாரம்.....எம்∙∙∙∙நிணத்​துள் புழுவாய்நுழைய∙∙∙∙நினைத்தால​ும்.....அனுமதியோம்!∙∙
    December 2, 2011 at 11:15am · Unlike · 1.




    Karan Johnsan · Friends with Emiliyanus Judes
    supe
    December 5, 2011 at 4:20am · Unlike · 1.



    Vj Yogesh அற்புதமான கவிதை. இந்த வரி தான் சிறந்ததென என்னால் குறித்துச் சொல்ல முடியவில்லை. எல்லாமே அருமை...!!
    December 5, 2011 at 8:24am · Unlike · 1

    ReplyDelete