Friday, July 29, 2011

கிளி ஜோஸ்யம்.



சொல்லுக்குள் பொருளாகி......
பொருளாகி அறிவிழந்து
அல்லுக்குள்...... பகலுக்குள்
அலமர்ந்து.....அந்தியின்.....கண்
மெல்லத்திறக்க மெலிதாகும் சிந்தனைகள்.

சீட்டு (1)

தொல்பொருளாகும் பட்ட
துன்பங்கள்!
துயரங்கள்....தோள்பட்டையேறும்!!!
தொடர்ந்தொருகால் தோல்விகளோ
நாள்பட்ட புண்களாய் நாறும்.

சீட்டு (2)

இருப்பென்னும்
வாழ்வின் கூறு வலிகொள்ளும்!
அதனுள்ளில்
காழ்ப்பும், வசவும்
கனபரிமாணங்களுடன்
மீண்டும் முருங்கை மரமேறும்!
வேதாளம்
யாண்டும் எள்ளி நகையாடும்.

சீட்டு (3)

மீண்டுமொரு
பூஜ்ஜியத்திலிருந்து புதிதாக
முளை கிளம்பும்!!!
வரட்சியில்....பூ.........வேறுவழியின்றிப்பூக்கும்.
புரட்சியெனவோர் பெயரும் அரசோச்சும்!!!

சீட்டு (4)
         
இனியும் யாரேனும்
யுத்தமென முனகினால்......
தலைவெடித்து சுக்கு நூறாகும்!!!
இவ்வாறு
வேதாளமும், கிளியும்
இயம்பிற்று!!!

No comments:

Post a Comment