Thursday, July 17, 2014

தீனி

 

 

மாமரத்து நிழலில்

மனிதன் என்னும் நினைவழிந்து

தூங்கிப்போனேன்

என்னைப்பற்றி

யாருக்கும் தீங்கிழைக்காத
இனிய பிறவி

குளிர்த்தி எறும்புகள்

முதலில் ஆரம்பித்தன

கொழுத்த கட்டெறும்புகள்

வன்மத்தால் சிவந்து

வெறுப்பை சுமந்து ஊர்ந்த

வேற்றெறும்புகள்

மொய்த்துக் கடித்து மேய்ந்தன

எஞ்சிய என்

மாமிசத்தை தூக்கிக்கொண்டு

எப்படியோ தப்பிவிட்டேன்

ஆனந்த பிரசாத்

Your sister talking to you idiot

 

 

Whenever the wind blows
You always come up
with your handmade kite
I know little about
aeronautics
It doesn't go and
take a flight
I'm very well aware of you
burying your spin top
You pretend to play with me
hide and seek
I have seen the digging and hiding
through my squint eyes
Sarcasm and tricks
what a geek
Playful and fool around
both knew the majesticity of the tree
Unexpectedly we experienced
The suddenness of
the killing spree
Innocence belongs to us
Evolved youth you as a boy
Your interventions
put you through
Under that tree
next to your toy

Anandprasad

காதல் நிலவே

 

 




கண்ணாமூச்சியாடும்

சூரியன் தயவில்

காணவொண்ணா நிலவு

நட்சத்திரங்கள்

நீலப்படுதாவில்

நிறைந்திருந்தன என்பது

என்வரையிலும் பொய்யே

காதல் மீதுரப்பெறின்

புறுபுறுக்கும் பழைய கட்டில்

எப்போதாவது

இடம்பெறும் உற்சவம்

இருளில் எழுந்து

இருளில் வந்து விழுவது

எங்களிருவரின் அன்றாடம்

நல்லவேளை

பள்ளியில்

அரிவரி இல்லாமல் போனது



ஆனந்த பிரசாத்

Mama

 

 

The day I was born at 5.12 pm
Happened to be a Good Friday
Holiness being crucified
Since I'm born
I peed, pooped and
spat all over her
Around the globe
She never hated me
nor regretted
Embraced my innocence
Nurtured me
One among infinity
Booming productivity
Provoking to vulnerability
Reject and disable
To our fertility
What do you expect
more than this?
These are all our gratitude

Anandprasad

வீழ்படிவு

 

 

நான்கு அல்லது ஆறாகவுமிருக்கலாம்

எண்ணிக்கையில் தெளிவில்லை

பழுத்து விழுந்தது

பனம்பழம்

கறுத்துத் திரண்ட புஜங்கள்

விழுந்த விசையில் வெடித்தது

பீய்ச்சியடித்தது மஞ்சள் களிம்பு

பூமிப்பந்தெங்கும்

எண்ணிக்கை தெரியாத

எறும்புகள் சாரிசாரியாக

அணிதிரண்டன

ஈரம் உலர்ந்துபோய்க்கிடந்த

மூன்று கொட்டைகளுக்காக

எஞ்சியிருந்த வடலிகள்

எரிந்து சாம்பலாயின

வயதில் மிகவும் மூத்த

கற்பகத்தருக்களோ

வழமையேயான திமிரோடு

நிமிர்ந்து

ஆனந்த பிரசாத்

''காற்றுவெளி'' 2014 ஆனிமாத மின்னிதழில்
வெளிவந்தது.
  • Santhiya Thiraviam நான்கு அல்லது ஆறாகவுமிருக்கலாம்

    எண்ணிக்கையில் தெளிவில்லை


    பழுத்து விழுந்தது

    பனம்பழம்
  • Jeyakumar Antoni அதிசூட்சுமமான சேதியொன்றைத் தந்து, மூப்பை அண்மித்தும், புஜங்களைத் திரட்டி நெஞ்சை நிமிர்த்த வைக்கிறது கவிதை. பாராட்டுக்கள் !
  • Kandiah Murugathasan · 23 mutual friends
    (ஏலையா க.முருகதாசன்)

    இக்கவிதையை எழுதிய ஆனந்த பிரசாத்திற்கு வணக்கத்துடன் நன்றிகள்.தமிழர் வாழ்வோடு நண்பனாயிருப்பது பனைமரம். நான் ஆசிரியராவிருந்து நடததிய ஏலையா சஞ்சிகையின் அட்டைப்படமும் என்றும் பனைமரத்தையே அலங்கரித்திருந்தது.