Friday, May 24, 2013

புதுக்'கவிதை'த்தவைகள்




(1) நன்றி.
எனக்கு
வசதியாக
மற்றவர்கள்
நடந்துகொள்ளும்போது.....

(2) வாழ்க்கை.
அவ்வப்போதில்
வானவில்லானாலும் கூட....
எப்போதுமே
ஜனகன் வில்தான்!

(3) அழகு.
மூளையை விட்டு
தேடச்சொன்னேன்
பைத்தியமாகி
திரும்பி வந்தது....
மனசை
தேடச்சொல்லாமா.....
என்று யோசித்தபோது
அது முன்னமேயே
அங்கே போய்
ஒட்டிக்கொண்டுவிட்டது.
(4) நோக்கு.
பறவைப் பார்வைக்கு
பயிர் போல மனிதர்கள்
பழமைப் பார்வைக்கு
புழுப்போலும் மனிதர்கள்.

(5) பிடிப்பு.
மழையோ சிறிய
மணித்துளியாய் பொழிகிறது
குழந்தையை மூடிய
வண்டியில் வைத்து.....தானும்
குடையைப் பிடித்தபடி
தள்ளிக்கொண்டே தாய் நடக்க....
அதுவோ
தளிர்க்கை வெளிநீட்டி
மழைக்கை பிடித்தபடி......

ஆனந்தபிரசாத்.
 
  • Pena Manoharan ’வாழ்க்கை அவ்வப்போதில் வானவில்லானுங்கூட எப்போதுமே ஜனகன் வில்தான்’ அருமை.தலைப்பில் ஏதோ தடுமாற்றம் தலைகாட்டி மறைகிறதே வானவில்லாய்.
  • Vanitha Solomon Devasigamony அதுவோ
    தளிர்க்கை வெளிநீட்டி
    மழைக்கை பிடித்தபடி......
  • Thiru Thirukkumaran வாழ்க்கை.
    அவ்வப்போதில்
    வானவில்லானாலும் கூட....
    எப்போதுமே
    ஜனகன் வில்தான்!//
  • Nathan Gopal பறவைப் பார்வைக்கு
    பயிர் போல மனிதர்கள்
    பழமைப் பார்வைக்கு
    புழுப்போலும் மனிதர்கள்.அருமை
  • Ravi Kathirgamu Good reflection of life....
  • Rajaji Rajagopalan மழையோ சிறிய
    மணித்துளியாய் பொழிகிறது
    குழந்தையை மூடிய
    வண்டியில் வைத்து.....தானும்
    குடையைப் பிடித்தபடி

    தள்ளிக்கொண்டே தாய் நடக்க....
    அதுவோ
    தளிர்க்கை வெளிநீட்டி
    மழைக்கை பிடித்தபடி......// இவ்வரிகளை ரசித்தேன் எனச் சொல்வதிலும் பார்க்க அவற்றில் நனைந்தேன் எனச் சொல்வதுதான் பொருத்தம்போல் தோன்றுகிறது. வழக்காமான பரிணாமத்திலிருந்து புதிய பரிணாமத்துக்கு கூடுவிட்டுக் கூடுபாய்கிறீர்களா? நன்றாய்த்தான் பாய்ந்திருக்கிறீர்கள். பரிசு கிடைக்கப்போகிறது!
  • Brahna Dev நன்றி.
    எனக்கு
    வசதியாக
    மற்றவர்கள்
    நடந்துகொள்ளும்போது.....


    ousam
  • Power Ful Brain வாழ்க்கை.
    அவ்வப்போதில்
    வானவில்லானாலும் கூட....
    எப்போதுமே
    ஜனகன் வில்தான்! // உண்மைதான்.
  • Santhiya Thiraviam அருமை
  • Athanas Jesurasa //குழந்தையை மூடிய
    வண்டியில் வைத்து.....தானும்
    குடையைப் பிடித்தபடி
    தள்ளிக்கொண்டே தாய் நடக்க....
    அதுவோ

    தளிர்க்கை வெளிநீட்டி
    மழைக்கை பிடித்தபடி......// - தனி அடையாளம்!
  • மன்னார் அமுதன் அருமையான வரிகள்
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan குறுகிய அருமையான வரிகள்.
  • VJ Yogesh புதுக் கவித்(தத்)துவங்கள் அருமை அண்ணா...!
  • Arasan Elayathamby உங்களுக்கு இப்படி சிறிய புதுக்கவிதைகள் நல்லா எழுதமுடியும் போல இருக்கே,, எதுக்கு சும்மா நீண்ட ,விளங்காத கவிதை மொழியில் எழுதமால் இப்படி எழுதலாமே !
  • Anand Prasad Arasan Elayathamby''உங்களுக்கு இப்படி சிறிய புதுக்கவிதைகள் நல்லா எழுதமுடியும் போல இருக்கே.... எதுக்கு சும்மா நீண்ட, விளங்காத கவிதை மொழியில் எழுதாமல் இப்படி எழுதலாமே...!''
    நன்றி அரசன் தங்கள் பரிந்துரைக்கு...!
    உங்களைத் தவிரவும்......... விளங்கிக்கொள்ளக்கூடிய
    ஏனையவர்களுக்காகவும் எழுதவேண்டியிருக்கிறதே?
  • Arasan Elayathamby என்னை தவிர இந்த உலகத்தில மற்ற எல்லாருக்கும் விளங்குது! என்ன பண்ணுறது என்னோட அறிவு அவளவுதான்!


Friday, May 10, 2013

கண்ணுக்குள் ஆடும் நாட்கள்.




கண்ணுக்குள் ஆடும் நாட்கள்

காட்டினுள்ளேயும் பூக்கள்......

சந்தோஷப்பாட்டு கேட்ட காலங்கள்........

வண்ணத்திரையில் என்றும்

வாழும் இலக்கியமாய்.....

சிந்தைக்குள் சொட்டும் தேன் துளிகள்......
(கண்ணுக்குள்)

வெந்து தணிந்தது பூமி....

வெற்றிகள்.... தோல்விகள்.....வேறினி....

நொந்து கழிந்தது போதுமே....

நோக்கு இருப்பினை நாடுமே......

வந்த பாதை வரலாறுதான்.....

வாழும்நாளில் மனம் ஆறும்தான்.....

இந்த நாள் அந்த நாளே.....

இலக்கணமாகும் என்றுமே.....
(கண்ணுக்குள்)

தூரவெளிப் பறவை போலவே...

தோன்றி இருள் கடந்து போகுமே.....

பாரங்கள் நெஞ்சில் எந்த நாளுமே.....

பாதை தொடர்ந்து வந்து வேகுமே....

காரணங்கள் பலவாயினும்.....

காரியங்கள் நடந்தேறுமே......

போரென்னும் பொய்களும் ஒயுமே......

பொன்னான காலங்கள் தோன்றுமே......
(கண்ணுக்குள்)